நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இயக்கம் மற்றும் சிறப்பு இயக்கம் 2.0-வில் பொருளாதார விவகாரங்களுக்கான துறை பங்கேற்றது

Posted On: 25 OCT 2022 2:04PM by PIB Chennai

2022 அக்டோபர் 2 முதல் 31 வரை நிலுவையில் உள்ள விஷயங்களை  பைசல் செய்யும் தூய்மை இயக்கம் மற்றும் சிறப்பு இயக்கம் 2.0-வில் பொருளாதார விவகாரங்களுக்கான துறை,  நிதியமைச்சகம்,   பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் இவற்றுடன் சேர்ந்த மற்றும் தன்னாட்சி அமைப்புகள் தீவிரமாக பங்கேற்றன.

இந்த இயக்கத்தின் போது  அமைச்சகங்கள்  அமைந்துள்ள இடத்தின்  தாழ்வாரங்களை அழகுப்படுத்துதல், அறைகளை புனரமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

நிலுவையில் உள்ள விஷயங்களை  பைசல் செய்வதில் கணிசமான சாதனையும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இரண்டாவது வாரத்தில், நாடாளுமன்ற வாக்குறுதிகளில் நிலுவையில் இருந்த 19 விஷயங்களில் 13 நிறைவேற்றப்பட்டன. பொதுமக்கள் குறைதீர்ப்பு தொடர்பான 278 விஷயங்களில் 185 பைசல் செய்யப்பட்டன. பொதுமக்கள் குறைதீர்ப்பில் நிலுவையில் இருந்த 40 மேற்முறையீடுகளில் 27 பைசல் செய்யப்பட்டன. 1,750 கோப்புகள்  ஆய்வு செய்யப்பட்டு இதுவரை  1,520 கோப்புகள் அகற்றப்பட்டன.

இந்த இயக்கத்தின் போது பயன்படாத பொருட்கள் விற்பனை மூலம்  ரூ.50,000 ஈட்டப்பட்டது. 5,000 சதுரஅடி அலுவலக இடமும், மறுஉரிமை பெறப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1870780

*************

SMB/Gee/Anand/Sha


(Release ID: 1870811) Visitor Counter : 172