உள்துறை அமைச்சகம்
90-வது இன்டர்போல் பொதுச்சபையின் நிறைவு அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
21 OCT 2022 4:30PM by PIB Chennai
நண்பர்களே!
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தின் போது புதுதில்லியில் இன்டர்போலின் 90-வது பொதுச் சபையின் நிறைவு அமர்வில் உரையாற்றுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்திய காவல்துறைக்கு இன்றைய தினம் மிக முக்கியமான நாளாகும். இந்தியா காவல்துறை தினமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் 35,000 காவல் துறையினர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டமும் இன்டர்போலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 195 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இன்டர்போல் கடந்த 100 ஆண்டுகளாக மிகச் சிறந்த வகையில் செயலாற்றி வருகிறது. 1949-ம் ஆண்டு இதில் சேர்ந்த இந்தியா மிகவும் பழைய உறுப்பு நாடாகும். இன்றைய உலகில் இன்டர்போல் போன்ற ஒரு அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் பங்காற்றி வரும் இன்டர்போலை இந்திய மக்களின் சார்பிலும், காவல்துறையின் சார்பிலும் பெரிதும் பாராட்டுகிறேன்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமாயணத்திலும், விதுரர், சுக்ராச்சாரியார், சாணக்கியர் போன்ற மகான்களின் நீதிலும், திருக்குறள் போன்ற அறநூல்களிலும் நீதி பரிபாலனம் குறித்து கூறப்படுகிறது.
மற்றொரு இதிகாசமான மகாபாரதத்தில் குற்றங்களை கட்டுப்படுத்துதல், நீதி வழங்குதல், வெற்றிகரமான நிர்வாகம் ஆகியவை குறித்து கூறப்பட்டுள்ளது.
நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால் தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ள பல முன் முயற்சிகளை இந்திய அரசு எடுத்துள்ளது. இந்திய அரசு தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பொருளாதார குற்றங்களை முறியடிக்க தேசிய அளவில் தரவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இன்டர்போல் அடுத்த 50 ஆண்டுக்கான எதிர்கால திட்டத்தை தயாரித்துள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தனது திட்டத்தை அது புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களை முறியடிக்கவும், சட்டவிரோத பணபரிவர்த்தனையை தடுக்கவும், திட்டமிடப்பட்ட சதிச்செயல்களை முறியடிக்கவும் இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது.
**************
PKV/AG/AND
(Release ID: 1870051)
Visitor Counter : 209