விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

நிலுவையில் உள்ள விஷயங்களை பைசல் செய்வதற்கும் தூய்மைப் பணிக்குமான சிறப்பு இயக்கம் 2.0-ஐ விண்வெளித்துறை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2022 12:58PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் குறைதீர்ப்பு தொடர்பாக 11 பிரிவுகளில் நிலுவையில் உள்ள விஷயங்களில்  விண்வெளித் துறையால் அடையாளம் காணப்பட்டு, விரைவான தீர்வுக்காக 2022 செப்டம்பர் 14 முதல் 30 வரை தயாரிப்பு இயக்கம் நடைபெற்றது.  பொதுமக்களின் குறைதீர்ப்பு, நாடாளுமன்ற வாக்குறுதிகள், அமைச்சகங்களுக்கு இடையேயான விஷயங்கள், தூய்மை இயக்கங்கள் ஆகியவை இதில் அடங்கும்.  போர்க்கால அடிப்படையில் அக்டோபர் 2 முதல் தினந்தோறும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

விண்வெளித் துறையின்  மையங்கள் / அலகுகள் / தன்னாட்சி அமைப்புகள் என 20 இடங்கள் தூய்மை இயக்கத்திற்கு அடையாளம் காணப்பட்டன.  இஸ்ரோவின் தலைமையகமான பெங்களுரு, இவற்றின் அலகுகள் அமைந்துள்ள திருவனந்தபுரம், வலியமாலா, ஸ்ரீஹரிகோட்டா, ஹைதராபாத், செகந்திராபாத், கடான்கி, அகமதாபாத், ஷில்லாங், ஹசன், விண்வெளித் துறையின் கிளை தலைமைச் செயலகம் உள்ள தில்லி ஆகிய இடங்களில் சிறப்புத் தூய்மை இயக்கம் அமலாக்கப்பட்டது.  அலுவலக வளாகங்கள், சிற்றுண்டி சாலைகள், கழிவுப்பொருட்கள் உள்ள இடங்கள், ஆவண அறைகள் போன்றவற்றில் தூய்மைப்பணி நடைபெற்றது.

இந்த உணர்வுடன் சிறப்புத் தூய்மை இயக்கம் 2.0 நடத்தப்படுகிறது.  இதையடுத்து மேற்குறிப்பிட்ட இடங்களில் தூய்மைப் பணியோடு  அனைத்து அலுவலகங்கள் மற்றும் கோட்டங்களில் திடீர் சோதனைகளும் நடைபெறுகின்றன.

**************

SMB/Veni/Anand/Sneha


(வெளியீட்டு அடையாள எண்: 1869945) வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी