கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்புத் தூய்மை பிரச்சாரம் 2.0-இன் ஒரு பகுதியாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறையில் பல்வேறு செயல்பாடுகள்


தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 6 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டது

Posted On: 21 OCT 2022 12:36PM by PIB Chennai

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை 'நிலுவையில் உள்ள விஷயங்களுக்கு தீர்வு காண்பதற்கான பிரச்சாரம் 2.0'-ன் கீழ் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நிலுவையில் உள்ளவற்றை அகற்றுதல் மற்றும் தூய்மையை மேம்படுத்துவதற்கான இடங்களை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அடையாளம் கண்டுள்ளது. இது சிறந்த மேலாண்மை, பணி திறன்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன் சிறந்த நிலையான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்.

நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் மற்றும் முன்னேற்றம் குறித்த விவரங்கள் தூய்மை பிரச்சார இயக்கம் 2.0 இணையதளத்தில் தொடர்ந்து பதிவேற்றப்படும்.

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம், “அப்லிஃப்ட் இந்தியா அமைப்பு” மற்றும் அதன் கூட்டு நிறுவனமான ஹம்சேஃபர் அறக்கட்டளையுடன் இணைந்து டிரக் ஓட்டுநர்களின் நலனுக்காக, இலவச சுகாதாரப் பாதுகாப்பையும், பாதுகாப்பான ஓட்டுநருக்கான தொழில்நுட்பத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு டிசம்பருக்குள் 10,000 டிரக் ஓட்டுநர்கள் பயன்பெறுவார்கள். 

கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனம் 612 மெட்ரின் டன் செப்பு கசடு, 210 டன் எடையுடைய தொழிற்சாலை கழிவுகள், 400 மெட்ரின் டன் குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளது. இதற்காக 400 பேர் கொண்ட உழைப்புதான திட்டம் 2022 அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கப்பட்டு, 1500 சதுரமீட்டர் பரப்பளவு  இடம் சுத்தம் செய்யப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டது. என்ஐஐஎஸ்டி உதவியுடன், “கழிவுகளிலிருந்து செல்வம்” திட்டத்தின்கீழ், தொழிற்துறைக் கழிவுகள் பயனுடைய பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் சுமார் 8000 மெட்ரின் டன் காப்பர் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பல்வேறு பணிகளை செய்துள்ளது. 6,000 செடிகள் நடுதல், 16.13 ஏக்கர் நிலத்தில் இருந்த காட்டுச் செடிகளை அகற்றுதல், அனைத்து விளக்குகளையம் எல்இடி விளக்குகளாக மாற்றுதல், ரூ.36 லட்சம் செலவில் 31 கோப்புகள் கணினி மயமாக்கல், ஆறு இ-கார்கள் மற்றும் இ-சார்ஜிங் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                             **************

KG/ANA/SNE


(Release ID: 1869939) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi , Telugu