பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கான “வாழ்க்கை வசதியை” இலக்காக கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கான பவிஷ்யா 9.0 ஒருங்கிணைந்த இணையதளத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 20 OCT 2022 1:40PM by PIB Chennai

மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங், ஓய்வூதியதாரர்களுக்கான ஒருங்கிணைந்த பவிஷ்யா 9.0 இணையதளத்தை புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் 2022 அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கி வைத்தார். பவிஷ்யா 9.0 பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களின் “வாழ்க்கை வசதியை” மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஓய்வூதியம் வழங்கும் மீதமுள்ள 16 வங்கிகளும் ஓய்வூதியதாரர்களுக்கான ஒருங்கிணைந்த இணையதளத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளும்.

2022 ஜூன் 15-ஆம் தேதி பயனாளிகளுடன் உரையாடிய மத்திய இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங், ஓய்வூதியம் பெறுவோர் எளிய வாழ்க்கை நடத்த ஓய்வூதியதாரர்களுக்கான ஒருங்கிணைந்த இணையதளத்தை ஏற்படுத்த பரிந்துரை செய்தார்.

இணையதள தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர்.ஜிதேந்திர சிங், ஓய்வூதியதாரர்களுக்கான ஒருங்கிணைந்த இணையதளம் பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வூதிய சேவை இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது ஒரே உள்நுழைதலில், அனைத்து தகவல்களையும், சேவைகளையும் பெற உதவும் என்று தெரிவித்தார்.

**************

KG/SM/SNE


(रिलीज़ आईडी: 1869689) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu