பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியாவில் உற்பத்தி முனையங்களை அமைத்து உலகளாவிய விநியோக அமைப்பை உருவாக்க தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை ஏற்படுத்தி பாதிப்புகளில் இருந்து விடுபடுமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
20 OCT 2022 1:24PM by PIB Chennai
இந்தியாவில் உற்பத்தி முனையங்களை அமைத்து உலகளாவிய விநியோக அமைப்பை உருவாக்க தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை ஏற்படுத்தி பாதிப்புகளில் இருந்து விடுபடுமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்று வரும் 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க – இந்திய வர்த்தக குழுமம் மற்றும் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். அமெரிக்க, இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய எல்லைகள்: அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற கருப்பொருளில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்வேறு சீர்திருத்தரங்கள் மூலம் கடந்த 8 வருடங்களில் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உற்பத்தி முனையங்களை அமைத்து உலகளாவிய விநியோக அமைப்பை உருவாக்க தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை ஏற்படுத்தி பாதிப்புகளில் இருந்து விடுபடுமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற வாய்ப்புகளின் வழியாக கூட்டாகவோ அல்லது தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் தனியாக அல்லது இந்திய நிறுவனங்களுடன் இணைந்தோ அமெரிக்க நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்களை அமைக்க முடியும் என்று அவர் கூறினார். பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் சிறந்த முதலீட்டுக்கான இடமாக இந்தியா திகழும் என்று அந்த நிறுவனங்கள் உணரும் என்று திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
**************
IR/AG/SM/SNE
(Release ID: 1869673)
Visitor Counter : 202