வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தீவிர முயற்சிகள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய புதுமை கட்டுமான தொழில்நுட்பங்களை மேம்படுத்த உதவியது: திரு ஹர்தீப் எஸ். பூரி¬

Posted On: 20 OCT 2022 9:04AM by PIB Chennai

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்  உலகின் மிகப்பெரிய வீட்டுத் திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி கூறியுள்ளார். இன்று ராஜ்கோட்டில் நடைபெற்ற பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்ட விருதுகள் பெற்றவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1.23 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது 2004 – 2014-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தை விட 9 மடங்கு அதிகம் என்று தெரிவித்தார்.     ஏற்கனவே 64 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மற்ற வீடுகள் கட்டும் பணி நிறைவுறும் தருவாயில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தை சிறந்த முறையில் அமல்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருதுகளை அறிமுகம் செய்தது. அதன்படி பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2021-ல் விருதுகள் பெற்றவர்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித்துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி இந்த நிகழ்ச்சியில் பாராட்டினார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் திரு கவுசல் கிஷோர், தமிழ்நாடு, குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள் , மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சக செயலாளர் திரு மனோஜ் ஜோஷி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அத்துடன் நாடு முழுவதும் உள்ள வீட்டு கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.

 இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஹர்தீப் எஸ் பூரி, கூட்டுறவு மற்றும்  போட்டி மிகு கூட்டாச்சிக்கு  சிறந்த எடுத்துக்காட்டாக பிரதமரின்  நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தீவிர முயற்சிகள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய புதுமை கட்டுமான தொழில்நுட்பங்களை மேம்படுத்த உதவியது என்று அவர் கூறினார்.

  கடந்த மே மாதம் பிரதமர் தொடங்கிவைத்த முதலாவது குறைந்த செலவில் நவீன வீடு கட்டும் திட்டம் குறித்து குறிப்பிட்ட திரு ஹர்தீப் எஸ் பூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

**************

IR/AG/SM/SNE

 


(Release ID: 1869520) Visitor Counter : 162