நிதி அமைச்சகம்
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மத்திய பதிவு பராமரிப்பு முகவர்கள் சந்தாதாரர்களை மையமாக கொண்ட இணைய சேவைகளை அளிப்பதற்காக டிஜி லாக்கர் பார்ட்னர் நிறுவனங்களாக மாறியுள்ளன
Posted On:
18 OCT 2022 12:49PM by PIB Chennai
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மத்திய பதிவு பராமரிப்பு முகவர்கள் சந்தாதாரர்களை மையமாக கொண்ட இணைய சேவைகளை அளிப்பதற்காக டிஜி லாக்கர் பார்ட்னர் நிறுவனங்களாக மாறியுள்ளன.
75-ஆம் ஆண்டு சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சுதந்திர தின அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் நினைவாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பின்வரும் சேவைகளை அளிக்கிறது.
1. டிஜிட்டல் லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி கணக்கு தொடங்குதல்
2. டிஜிட்டல் லாக்கர் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி ஏற்கனவே உள்ள முகவரியை புதுப்பித்தல்
டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முக்கிய முன்முயற்சியாகும். இது டிஜிட்டல் துறையில் இந்தியாவை முதன்மை பெற்ற நாடாக மாற்றும் அரசின் முக்கிய திட்டமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1868739
**************
KG/ANA/SHA
(Release ID: 1868895)