மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
திரு தர்மேந்திர பிரதான் உத்தரகாண்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ செயல்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
प्रविष्टि तिथि:
16 OCT 2022 6:10PM by PIB Chennai
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரகாண்ட் முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தரகண்ட் மாநிலத்தின் சுகாதாரம், கல்வி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் டாக்டர் தன் சிங் ராவத் மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வில் பங்கேற்ற உத்தரகாண்ட் அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.
தேசிய கல்விக்கொள்கை 2020 என்பது அறிவு சார்ந்த பொருளாதாரம் மற்றும் சமூகத்தை அமைப்பதற்கான ஒரு தத்துவ ஆவணம் என்று அவர் கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஒரு தெய்வீக பூமி என்றும் அறிவு பூமி என்றும் அவர் கூறினார்.
தேசிய கல்விக்கொள்கை 2020 என்பது, கல்வி கற்பதற்கு 3 வயது முதல் பால்வாடிகா எனப்படும் முதல் மூன்று வருடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதை ஏற்றுக்கொண்ட முதல் மாநிலமாக நாட்டிலேயே உத்தரகாண்ட் இருப்பதாகவும் திரு பிரதான் கூறியுள்ளார்.
பின்னர் அவர் மேலும் கூறுகையில், “தேசிய கல்விக்கொள்கை 2020, உள்ளூர் மொழிகளுக்கும் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது.
காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து நமது கல்வி முறையை நாம் பிரித்து எடுத்து, முன்னோக்கிய கல்வி முறையை உருவாக்க வேண்டும்”, என்றார்.
உத்தரகாண்ட் மாநிலம், இளைஞர்களை நாளைய சவால்களுக்கு தயார்படுத்தும் திறன் கொண்டது என்றும் இன்றைய துவக்கம் அந்த திசையை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும் என்றும் அவர் கூறினார்.
*********
GS/SM/DHA
(रिलीज़ आईडी: 1868357)
आगंतुक पटल : 227