பாதுகாப்பு அமைச்சகம்
காலாட்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நான்கு கார்டினல் திசைகளிலிருந்து பைக் பேரணிகள் கொடியேற்றதுடன் தொடக்கம்
Posted On:
16 OCT 2022 12:28PM by PIB Chennai
அக்டோபர் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் 76 வது காலாட்படை தினத்தை நினைவுகூரும் வகையில், காலாட்படை வீரர்கள் அனைத்து கார்டினல் திசைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் நான்கு பைக் பேரணிகளை உள்ளடக்கிய "காலாட்படை நாள் பைக் பேரணி 2022 ஐ ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த பைக் பேரணி வரும் 2022, அக்டோபர் 16 ஆம் தேதி, ஷில்லாங் (மேகாலயா), வெலிங்டன் (தமிழ்நாடு), அகமதாபாத் (குஜராத்) மற்றும் ஜம்மு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) ஆகிய இடங்களில் இருந்து தொடங்கி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, “காலாட்படை தினத்தன்று தேசிய போர் நினைவிடத்தில் முடிவடையும்.
பத்து பைக்கர்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவும், காலாட்படையின் 'எஸ்பிரிட்-டி-கார்ப்ஸை' காட்சிப்படுத்த 8,000 கிமீ பயணத்தை மேற்கொள்ளும்.
இதன் நோக்கமானது, காலாட்படையின் வீர, தீர ஆற்றலை மற்றும் சாகசத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது நாட்டு மக்களுடன் இணைந்து ஒற்றுமையின் வலிமையை வெளிக்காட்டுவதற்காகத்தான்.
"பயோனெட் பைக்கர்கள்" காலாட்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வீரம் மற்றும் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வீர மரணம் அடைந்த வீரர்களின் மனைவியர், நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள், முன்னாள் வீரர்கள், என்சிசி மாணவர்கள், மற்றும் உள்ளூர் மக்களுடன், அவர்கள் இணைந்து அனைவருடனும் உள்ள தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில் செயல்படுவர்.
பைக்கர் குழுக்கள், அசாம் ரெஜிமெண்ட் ஷில்லாங்கில் இருந்தும் மராத்தா லைட் காலாட்படை படைப்பிரிவு அகமதாபாத்தில் இருந்தும், ஜம்மு மற்றும் காஷ்மீர் லைட் காலாட்படை ரெஜிமெண்ட் உதம்பூரில் இருந்தும், மெட்ராஸ் ரெஜிமெண்ட் வெலிங்டனில் இருந்தும் புறப்படும்.
*********
GS/SM/DHA
(Release ID: 1868238)
Visitor Counter : 173