சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வழிகாட்டுதல்களுக்கு இணங்குதல் மற்றும் கண்டிப்புடன் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு செயல்படுத்தும் முகமைகளை காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
15 OCT 2022 1:42PM by PIB Chennai
வரும் நாட்களில் தேசியத் தலைநகர் தில்லி பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டிற்கு எதிரான போரில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள காற்று தர மேலாண்மை ஆணையம், தாங்கள் வெளியிட்டுள்ள சட்டப்பூர்வ வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு தேசியத் தலைநகர் தில்லி பிராந்தியம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள தொழில்கள், கட்டுமானம் மற்றும் இடிப்பு தளங்களின் திட்டச் செயற்பாட்டாளர்கள் உட்பட அனைவரையும் வலியுறுத்தியுள்ளது.
குடிமக்கள் சாசனத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை, வரும் நாட்களில் தரப்படுத்தப்பட்ட பொறுப்பு செயல் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தீவிரமாகப் பின்பற்றுமாறு குடிமக்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
14.10.2022 நிலவரப்படி, 8,580 க்கும் மேற்பட்ட இடங்கள் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் பறக்கும் படைகளால் ஆய்வு செய்யப்பட்டன. ஆணையத்தின் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை மீறிய 491 நிறுவனங்களை மூடுவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தில்லியில் 110; ஹரியானாவில் 118 (என்சிஆர்); உத்தரபிரதேசத்தில் 211 (என்சிஆர்); மற்றும் ராஜஸ்தானில் (என்சிஆர்) 52.
*****
(रिलीज़ आईडी: 1868075)
आगंतुक पटल : 202