பாதுகாப்பு அமைச்சகம்

அக்னிவீரர்களுக்கு சம்பளத் தொகுப்புக்கான வரலாற்று சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பதினொரு வங்கிகளுடன் இந்திய ராணுவம் கையெழுத்திட்டது.

Posted On: 15 OCT 2022 1:53PM by PIB Chennai

அக்கினி வீரர்களுக்கு வங்கி வசதிகளை அளிக்கும் விதத்தில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் 14-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி,  வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

 

அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அம்சங்கள் மற்றும் பலன்கள் பாதுகாப்புச் சம்பளத் தொகுப்பைப் போலவே உள்ளன. கூடுதலாக, வங்கிகள் வெளியேறும் அக்னிவீரர்களுக்கு அவர்களின் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்த மென் கடன்களை வழங்குகின்றன. “அக்னிபத் திட்டத்தின்” கீழ் முதல் தொகுதி அக்னிவீரர்கள் ஜனவரி 2023க்குள் பயிற்சி மையங்களில் சேருவார்கள்.

 

*******



(Release ID: 1868039) Visitor Counter : 153


Read this release in: English , Urdu , Marathi , Hindi