பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டிற்குள் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பங்களாதேஷ் நாட்டின் 1800 குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

Posted On: 11 OCT 2022 12:57PM by PIB Chennai

பங்களாதேஷ் குடிமைப் பணியாளர்களுக்கு கள நிர்வாகத்தில் திறன் பயிற்சி அளிப்பதற்கான  53-வது இரண்டு வார காலம் பயிற்சி திட்டம்   முசோரியில் உள்ள சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தில் இன்று தொடங்கியது. 2019-ம் ஆண்டுக்கு முன்பாக அங்கு பங்களாதேஷ் நாட்டின் 1500 குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த முதற்கட்ட பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றதையடுத்து, 2025-ம் ஆண்டிற்குள் பங்களாதேஷ் நாட்டின் 1800 குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து பல்வேறு நாடுகளின் குடிமைப் பணியாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ். கென்யா, தான்சானியா, துனிஷியா, செசல்ஸ், காம்பியா, மாலத்தீவு, இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், பூடான், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய  15 நாடுகளின் குடிமைப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்  மின்னணு நிர்வாகம், டிஜிட்டல் இந்தியா, நீடித்த வளர்ச்சி நோக்கங்களுக்கான  அணுகுமுறை, ஆதார் அட்டை உபயோகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியின் போது, தில்லி மெட்ரோ, நவீன நகரம், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையம், மத்திய தகவல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய இடங்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

 

**************

IR/RS/SM/IDS


(Release ID: 1866841) Visitor Counter : 209