பிரதமர் அலுவலகம்
முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர் அஞ்சலி
प्रविष्टि तिथि:
10 OCT 2022 10:22AM by PIB Chennai
முதுபெரும் அரசியல்வாதி திரு.முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார் என்றும், ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். திரு.யாதவ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது வலிமையான இந்தியாவுக்காக உழைத்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். திரு.யாதவ்-வுடனான தனது நெருங்கிய தொடர்பை நினைவு கூர்ந்த பிரதமர், யாதவின் கருத்துகளை கேட்க தான் எப்போதும் தயாராக இருந்ததாக தெரிவித்துள்ளார். யாதவுடனான தனது சந்திப்புகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
“திரு.முலாயம் சிங் யாதவ் ஆளுமை மிகுந்த தலைவர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த ஒரு சிறந்த தலைவராகவும், பணிவுமிக்க தலைவராகவும் அவர் அறியப்பட்டார். யாதவ் விடாமுயற்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றினார். ஜேபி. லோக்நாயக் மற்றும் டாக்டர்.லோகியாவின் கொள்கைகளை பரப்புவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர்”.
“திரு.முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச அரசியலிலும், தேசிய அரசியலிலும் தனித்துவமிக்கவராக திகழ்ந்தார். அவசரநிலை பிரகடன காலத்தில் ஜனநாயகத்தை காப்பதில் முக்கிய வீரராக திகழ்ந்தவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அவர் வலிமையான இந்தியாவுக்காக பாடுபட்டார். தேசிய நலன்களை மேம்படுத்துவது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினார்”.
“நான் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை திரு.முலாயம் சிங் யாதவை தொடர்பு கொண்டுள்ளேன். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததுடன், அவரது கருத்துகளை கேட்க எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி”.
**************
(Release ID: 1866359)
KG/SV/RR
(रिलीज़ आईडी: 1866382)
आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam