கலாசாரத்துறை அமைச்சகம்

ஜலதிபுரயாத்ரா: இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் பன்முக -கலாச்சார இணைப்புகளைக் கண்டறிதல்-எனும் வானிலை குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை ஏஎஸ்ஐ நடத்தியது.

Posted On: 09 OCT 2022 2:26PM by PIB Chennai

மழைக்காலக் காற்று மற்றும் பிற காலநிலை காரணிகள் மற்றும் இந்த இயற்கை கூறுகள் தாக்கத்தை ஏற்படுத்திய விதங்கள், வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, 2014 ல் கத்தாரின்  தோஹாவில்,  நடைபெற்ற யுனெஸ்கோவின் 38வது உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டத்தில் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் 'மௌசம் - வானிலை ' திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் (ஏஎஸ்ஐ) நிர்வகிக்கப்படுகிறது.

மேலும், ஆராய்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் இந்த விஷயத்தைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துதல்  நோக்கத்துடன், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் புது தில்லியில் உள்ள இந்திய ஹாபிடேட் சென்டரில் இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் இரண்டு நாள் தேசிய மாநாட்டை ஏஎஸ்ஐ ஏற்பாடு செய்தது. "ஜலதிபுரயாத்ரா: பன்முக -கலாச்சார இணைப்புகளை ஆராய்தல் ”, மாநாடு கடல்சார் பரிமாற்றங்கள் மற்றும் கலந்துரையாடல்களின்  பன்மடங்கு அம்சங்களை உள்ளடக்கியது.

மாநாட்டின் தொடக்க அமர்வை கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை  இணையமைச்சர் திரு  அர்ஜுன் ராம் மேக்வால், கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி. மீனாஷி லேகி.   கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் மற்றும் தற்போது தில்லியில் உள்ள பல இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தூதர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

பார்வையாளர்களிடம் உரையாற்றிய திருமதி. மீனாஷி லேகி, பிற நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளின் பல அம்சங்களில் பாகுபாடற்ற ஆராய்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். திரு அர்ஜுன் ராம் மேக்வால் தனது உரையில், மற்ற நாடுகளுடனான இந்தியாவின் தொடர்புகள் பற்றிய  பல சுவாரஸ்யமான வரலாற்று அத்தியாயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

வானிலை  திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த கையேடு, இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் இந்தியாவின் உலக பாரம்பரிய சொத்துக்களின் பட்டியல் ஆகியவை இந்த விழாவில் வெளியிடப்பட்டன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருபதுக்கும் அதிகமான  அறிஞர்கள் மாநாட்டின் கல்வி அமர்வுகளில் பங்கேற்றனர். வானிலை ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் காலநிலை மாற்றம், நீருக்கடியில் ஆய்வுகள், கட்புலனாகாத கலாச்சார பாரம்பரியம் ஆகிய துறைகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணர்கள் இதில் அடங்குவர்.

********



(Release ID: 1866247) Visitor Counter : 182