குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மிலாதுநபி பண்டிகையையொட்டிக் குடியரசுத் தலைவரின் வாழ்த்துக்கள்

प्रविष्टि तिथि: 08 OCT 2022 8:07PM by PIB Chennai

மிலாதுநபி பண்டிகையையொட்டிக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டிருக்கும்  வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:  

“முகமது நபியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் ஈத்-இ-மிலாத் அல்லது மிலாதுநபி பண்டிகையையொட்டி, சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகமது நபி அவர்கள் கருணை, எளிமை மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்யும் செய்தியை உலகிற்கு வழங்கினார். அவரது செய்தி நம் ஒவ்வொருவரையும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவப் பாதையில் முன்னேற ஊக்கப்படுத்துகிறது.

ஹஸ்ரத் முகமதுவின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்று, பரஸ்பர நல்லிணக்கத்துடன் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிஏற்போம்." 

**************


(रिलीज़ आईडी: 1866129) आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Kannada