பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
தூய எரிசக்தி பங்களிப்பில் உத்தி வகுத்தல் குறித்து அமெரிக்கா- இந்தியா அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை 2022 அக்டோபர் 7 அன்று நடைபெற உள்ளது
Posted On:
05 OCT 2022 12:55PM by PIB Chennai
2022 அக்டோபர் 6 முதல் 11 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி மற்றும் ஹூஸ்டனுக்கு செல்லவிருக்கும் அதிகாரப்பூர்வ மற்றும் வணிகத் தூதுக்குழுவிற்கு
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி தலைமைதாங்குவார்.
வாஷிங்டனில் 2022 அக்டோபர் 7 அன்று நடைபெற உள்ள தூய எரிசக்தி பங்களிப்பில் உத்தி வகுத்தல் குறித்து அமெரிக்கா- இந்தியா அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் எரிசக்தி துறை அமைச்சர் திருமதி ஜெனிஃபர் கிரான்ஹோமுடன் இணைந்து மாண்புமிகு அமைச்சர் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
2021 ஏப்ரலில் நடைபெற்ற பருவநிலை குறித்த தலைவர்கள் நிலையிலான உச்சி மாநாட்டில் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியும் மேன்மை தாங்கிய அதிபர் ஜோ பைடனும் அறிவித்ததன் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட அமெரிக்கா - இந்தியா பருவநிலை மற்றும் தூய்மை எரிசக்தி செயல்பாட்டுக்கான 2030 பங்குதாரர் அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்தப் பங்களிப்பு நவீன எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு; தூய எரிசக்தி தொழில்நுட்பங்களில் உருவாக்கத்தை அதிகரித்தல்; ஐந்து தூண்கள் மூலம் தொழில்நுட்ப தீர்வுகளில் ஈடுபடுதல் :
(1) எண்ணை மற்றும் எரிவாயு பொறுப்பு (2 )மின்சாரம் மற்றும் எரிசக்தித் திறன் (3) புதுப்பிக்க வல்ல எரிசக்தி (4) நீடிக்க வல்ல வளர்ச்சி (5) எரிபொருள் மற்றும் தொழில்நுட்பங்களின் அதிகரிப்பு
பருவநிலை உறுதித் தன்மைக்கான நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் மாண்புமிகு அமைச்சர் கலந்துரையாடுவார் . வாஷிங்டன் டிசியில் அமெரிக்க -இந்திய வணிக கவுன்சிலிலும் அமெரிக்கா-இந்திய உத்தி வகுத்தல் பங்களிப்பு அமைப்புடன் ஹூஸ்டனிலும் என இரண்டு வட்டமேசை நிர்வாக கூட்டத்திலும் அவர் பங்கேற்பார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் மாண்புமிகு அமைச்சர் விவாதிப்பார்.
********
(Release ID: 1865345)
Visitor Counter : 193