குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தசரா பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
04 OCT 2022 3:33PM by PIB Chennai
தசரா பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது செய்தியின் முழு விவரம் பின்வருமாறு –
“இந்தியா முழுவதும் பாரம்பரிய உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் தசராவின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல் விருப்பங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியின் அடையாளமான தசரா, 'தர்மம்' அல்லது நீதியின் மீதான நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. பகவான் ராமரால் போற்றப்பட்ட உண்மை, நீதி, இரக்கம், கடமை, தைரியம் ஆகிய நற்பண்புகளைப் போற்றுவதற்கும் உத்வேகம் பெறுவதற்கும் இது ஒரு நிகழ்வாகும்.
இந்தப் பண்டிகை நாட்டில் அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவரட்டும்."
*****
(रिलीज़ आईडी: 1865160)
आगंतुक पटल : 212