பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத் தளவாடங்கள் (சி மற்றும் எஸ்) பிரிவின் புதிய தலைமை இயக்குனராக சஞ்சீவ் கிஷோர் பொறுப்பேற்றுக் கொண்டார்

Posted On: 04 OCT 2022 1:44PM by PIB Chennai

இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலை சேவையின் 1985 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த திரு சஞ்சீவ் கிஷோர், ராணுவத் தளவாட (சி மற்றும் எஸ்) பிரிவின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியில் இருந்த திரு எம் கே கிராக் ஓய்வு பெற்றதை அடுத்து 01.10.2022 முதல் இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை ஏற்பதற்கு முன் திரு கிஷோர் கொல்கத்தாவில் உள்ள ராணுவத் தளவாட ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் இயக்ககத்தின் கூடுதல் தலைமை இயக்குனராக இருந்தார்.

 

2021ல் மத்திய அரசு உருவாக்கிய  7 புதிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆர்மர்ட் வெகிக்கிள்ஸ் நிகம் லிமிடெட்(ஏவி என்எல்)ன் முதலாவது தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட பல முதுநிலை பொறுப்புகளை திரு கிஷோர் வகித்துள்ளார். அரசுத் துறையிலிருந்து  ஒரு கார்ப்பரேஷனாக இது சுமூகமாக மாற்றப்படுவதை அவர் உறுதி செய்தார். இவரது தலைமையின் கீழ் செயல்பட்ட ஏவிஎன்எல் முதல் ஆறு மாதங்களிலேயே லாபம் ஈட்டி சாதனை படைத்தது.

 

இதன் தலைவர் மற்றும் மேலாண்மை  இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன் ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையின்  முதுநிலைப் பொதுமேலாளராகவும்   டேராடூனில் உள்ள ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் பொது மேலாளராகவும் திரு கிஷோர் பணியாற்றியுள்ளார்.

 

பல்வேறு பணிநிலைகளில் வேறுபட்ட தொழில்நுட்பச் சூழல்களில் திரு கிஷோர் பணியாற்றியுள்ளார்.  பாதுகாப்பு துறைக்கான தளவாடங்கள் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் சிறப்புமிக்க சேவைகளுக்காக இவருக்கு சாந்து சஹானே நினைவுக் கேடயமும் ஆயுத் பூஷன் விருதும் வழங்கப்பட்டன.

 

*****



(Release ID: 1865115) Visitor Counter : 160