தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்திரபிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2022 2:58PM by PIB Chennai

மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு  பீகாரில் மோகமா, கோபால் கஞ்ச், ஹரியானாவில் ஆதம்பூர், தெலங்கானாவில் முனுகோட், உத்திரபிரதேசத்தில் கோலா கோக்ரநாத், ஒடிசாவில் தாம்நகர் (எஸ்சி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல், அக்டோபர் 7, 2022 அன்று தொடங்கி அக்டோர் 14, 2022 அன்று நிறைவடைகிறது.  வேட்புமனு மீதான பரிசீலனை அக்டோபர் 15, 2022 அன்று நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 17, 2022 ஆகும்.  வாக்குப்பதிவு நவம்பர் 3, 2022, அன்று நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நவம்பர் 6, 2022 அன்று மேற்கொள்ளப்படும்.

                                                                                                                                             -------


(வெளியீட்டு அடையாள எண்: 1864760) வருகையாளர் எண்ணிக்கை : 257
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Odia , Telugu