சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள குறிப்புகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 2.0 ஐ அறிமுகப்படுத்தியது

Posted On: 02 OCT 2022 2:54PM by PIB Chennai

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம்  தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள குறிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 2.0 ஐ அறிமுகப்படுத்தியது. அமைச்சகம் மற்றும் அதன் கீழ் உள்ள அலுவலகங்களில் இதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் அனைத்து கள அலுவலகங்கள், சுங்கச்சாவடிகள் உட்பட சுமார் 1200 இடங்களில் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்வில் போக்குவரத்து பவனில் இந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அதன்  செயலாளர் திரு. கிரிதர்அராமனே தூய்மை உறுதிமொழியை செய்து வைத்தார். பல்வேறு பிரிவுகளின் கீழ் நிலுவையில் உள்ள குறிப்புகளை பைசல்  செய்யுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்  அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் தூய்மை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

***************


(Release ID: 1864520) Visitor Counter : 174