நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உள்நாட்டு விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை 2023 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளது
Posted On:
02 OCT 2022 9:57AM by PIB Chennai
மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி தீர்வைகளில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பதும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
உலகளாவிய விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் உள்ளது. உலகளாவிய விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு ஆகியவற்றால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை கணிசமாக குறையக்கூடும்.
சுத்திகரிக்கப்படாத பாமாயில், ஆர்பிடி பாமாலின், ஆர்பிடி பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது தற்போதுள்ள தீர்வை 2023 மார்ச் 31 வரை மாற்றமில்லாமல் நீடிக்கும்.
சுத்திகரிக்கப்படாத பாமாயில் வகைகள் சோயா பீன் எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி தீர்வை தற்போது பூஜ்யமாக உள்ளது. இருப்பினும் இந்த மூன்று வகையான சமையல் எண்ணெய்களுக்கு சுத்திகரிக்கப்படாத வகைகளுக்கான வேளாண் செஸ் மற்றும் சமூக நலத்திட்ட செஸ் 5.5 சதவீதமாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1864312
******
(Release ID: 1864382)
Visitor Counter : 297