ஆயுஷ்

"ஆயுர்வேத தினம் 2022" கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆயுஷ் அமைச்சகம் சிறிய வீடியோ தயாரிப்பு போட்டியை அறிவித்துள்ளது

Posted On: 01 OCT 2022 3:51PM by PIB Chennai

மந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் MyGov.in உடன் இணைந்து ஆயுர்வேத தினத்தைக்கொண்டாடுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு சிறிய வீடியோ உருவாக்கும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. பங்கேற்பாளர்கள், இந்த ஆண்டு ஆயுர்வேத தினத்தின் முக்கிய கருப்பொருளான “இல்லந்தோறும் ஆயுர்வேதா” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் 03 நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவை சமர்ப்பிக்கலாம்.

 

தீம் 1: என் நாளில் ஆயுர்வேதம்.

 

தீம் 2: என் சமையலறையில் ஆயுர்வேதம்.

 

தீம் 3: என் தோட்டத்தில் ஆயுர்வேதம்.

 

தீம் 4: எனது பண்ணையில் ஆயுர்வேதம்.

 

தீம் 5: எனது உணவில் ஆயுர்வேதம்.

 

ஒவ்வொரு கருப்பொருளிலிருந்தும் மூன்று சிறந்த வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அதாவது மொத்தம் 15 வெற்றியாளர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ. 25,000/-வரை வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். வீடியோவைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 10, 2022 ஆகும். வீடியோவைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறை, போட்டி மற்றும் செயல்முறை பற்றிய கூடுதல் விவரங்களை https://innovateindia.mygov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

ஆயுர்வேதம் மிகவும் பழமையான மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது நவீன காலங்களிலும்   பொருந்துகிறது. ஆயுஷ் அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு  ஏற்பாடு செய்து வருகிறது, மேலும் ஆயுர்வேதத்தின் பலன்களை அடிமட்ட நிலைக்கு கொண்டு செல்ல, பிற அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆதரவுடன் அது செயல்படுகிறது.

 

ஆயுர்வேத தினம் 2016 ஆம் ஆண்டு முதல் தன்வந்திரி ஜெயந்தி (தன்தேராஸ்) அன்று  கொண்டாடுப்படுகிறது. இந்த ஆண்டு இது 23 அக்டோபர் 2022 அன்று கொண்டாடப்படும்.

 

**************



(Release ID: 1864176) Visitor Counter : 195