குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 01 OCT 2022 1:18PM by PIB Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

 

“தேசத் தந்தையின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நவீன இந்தியாவின் எழுச்சியூட்டும் ஆளுமைகளுள் ஒருவரான மகாத்மா காந்தி, இது போன்ற சவாலான தருணங்களில் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வழிகாட்டியாகவும், நம்பிக்கையாகவும் தொடர்ந்து நீடிக்கிறார். அநீதிக்கு எதிரான அவரது சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை போராட்டம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ளது. உண்மையின் மீதான காந்தி அவர்களின் நம்பிக்கையும், மனிதர்களிடம் நல்லுணர்வும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

 

ஒவ்வொரு தலைமுறையும் மகாத்மா காந்தியை தனக்குரிய வழியில் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். வறுமை முதல் பருவநிலை மாற்றம், போர்கள் வரை உலகம் இன்று சந்தித்து வரும் ஏராளமான அபாயங்களை மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றி வெற்றிகரமாக தீர்க்க முடியும். எந்த ஒரு பிரச்சனைக்கும் போர் தீர்வாகாது என்ற பாபு அவர்களின் குரல், மனித சமூகத்தை வழிநடத்துகிறது.

 

காந்தி ஜெயந்தியன்று, வன்முறை, தாக்குதல், தீவிரவாதம் மற்றும் ஏற்றத்தாழ்வின் அனைத்து வடிவங்களும் இல்லாத அமைதியான உலகிற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1864086

 

***************


(Release ID: 1864144) Visitor Counter : 210