ஜல்சக்தி அமைச்சகம்

தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் 45-வது நிர்வாக குழு கூட்டத்தில் ரூ. 1145 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

Posted On: 01 OCT 2022 11:29AM by PIB Chennai

தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் 45-வது நிர்வாக குழு கூட்டம் அதன் தலைமை இயக்குநர் திரு ஜி. அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூ. 1145 கோடி மதிப்பீட்டில் வடிகால் மேலாண்மை, தொழில்துறை மாசு கட்டுப்பாடு, பல்லுயிர் பாதுகாப்பு மரம் நடுதல், ஆற்றுப் படுகை மேம்பாடு மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை சம்பந்தமான 14 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

 

உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து முக்கிய கங்கை படுகையில் உள்ள மாநிலங்களில் கழிவுநீர் மேலாண்மைக்கான எட்டுத் திட்டங்கள் இதில் அடங்கும். ரூ. 308.09 கோடி மதிப்பில் நான்கு வடிகால் மேலாண்மை திட்டங்களை உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல அம்மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பல்லுயிர் பூங்காக்களை அமைக்கவும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1864057

 

***************



(Release ID: 1864093) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Hindi , Telugu