பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
இந்திய திவால் மற்றும் திவால் வாரியம் ஆறாவது ஆண்டு தினத்தை நாளை கொண்டாடுகிறது
Posted On:
30 SEP 2022 3:23PM by PIB Chennai
இந்திய திவால் மற்றும் திவால் வாரியம் தனது ஆறாவது ஆண்டு தினத்தை நாளை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகவும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் இணையமைச்சர் திரு.இந்தர்ஜித் சிங் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.
இந்திய திவால் மற்றும் திவால் வாரியம் தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், வருடாந்திர விரிவுரைத் தொடரை நிகழ்த்த உள்ளது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் தலைவரான ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி திரு.ராமலிங்கம் சுதாகர், இந்திய வணிகப் போட்டி ஆணையத்தின் தலைவர் திரு.அசோக் குமார் ஆகியோர் வருடாந்திர உரையை வழங்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், “ஐபிசி:ஆலோசனைகள், பதிவுகள் மற்றும் செயல்படுத்தல்” என்ற ஆண்டறிக்கையும் வெளியிடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் தொழிற்துறை வல்லுநர்கள், வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1863748
**************
(Release ID: 1863890)