பாதுகாப்பு அமைச்சகம்
ஆயுத தொழிற்சாலை வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு
Posted On:
30 SEP 2022 3:00PM by PIB Chennai
ஆயுத தொழிற்சாலை வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புது தில்லியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ‘விஜயதசமி’ அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் இந்த நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தது நினைவிருக்கலாம்.
ஆய்வுக்கு பின் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நிறுவனங்களின் உண்மையான திறனை வெளிக்கொணர்வதன் மூலம் நாட்டை பிரதமரின் ‘ஆத்மநிர்பர்’ அதாவது, இந்தியர்கள் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இந்த நிறுவனங்களுக்கு நவீனமயமாக்கலுக்காக 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ.2,953 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.. மேலும், இந்த நிறுவனங்களுக்கு அவசரகால நிதியாக ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த, கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய காரணிகளை திரு ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாதுகாப்புத் துறைக்கு முக்கியமானதாக அமைய பெற்றிருக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
இந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்த வளர்ச்சியில் புதிய மைல்கற்களைத் தொடும் என்று மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
“உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது. தனியார் துறையின் தீவிரப் பங்கேற்புடன், வடிவமைப்பு, உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய துறைகளில் இந்தியாவை உலகின் முன்னணி நாடுகளில் கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்றார். இன்று நமது நாடு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. நமது பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த 7-8 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 5-6 மடங்கு அதிகரித்து ரூ.13,000 கோடியாக உயர்ந்துள்ளது. என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், இந்தப் புதிய நிர்வாகம் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு வெளிநாட்டிலும் புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டும்” என்றார். ஸ்ரீ ராஜ்நாத் சிங் கூறினார். புதிய நிறுவனங்கள் பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும், ஆனால் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
*******
(Release ID: 1863887)
Visitor Counter : 158