ஜவுளித்துறை அமைச்சகம்

2018-19ம் ஆண்டின் சிறந்த தனி மாநாட்டு மையத்திற்கான தேசிய சுற்றுலா விருது கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய கண்காட்சி மையம் மற்றும் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது

Posted On: 28 SEP 2022 1:23PM by PIB Chennai

புது தில்லியில் செப்டம்ர் 27, 2022 அன்று நடைபெற்ற தேசிய சுற்றுலா விருது 2022 நிகழ்ச்சியின் போது, 2018-19ம் ஆண்டின் சிறந்த தனி மாநாட்டு மையத்திற்கான தேசிய சுற்றுலா விருதை இந்திய கண்காட்சி மையம் மற்றும் நிறுவனம் பெற்றது

குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கரிடமிருந்து இவ்விருதை இந்திய கண்காட்சி நிறுவனத்தின் தலைவர் திரு ராஜேஷ் குமார், தலைமை செயல் அதிகாரி திரு சுதீப் சர்க்கார் ஆகியோர் பெற்றனர்.

பின்னர் பேசிய, இந்திய கண்காட்சி நிறுவனத்தலைவர் திரு ராஜேஷ் குமார், 2,35000 சதுர மீட்டர் பரப்பளவில் அனைத்து விதமான வர்த்தக நிகழ்வுகளுக்கும், வசதிகளுடன் கூடிய உலகத் தரம்  வாய்ந்த இடமாக இது அமைந்துள்ளதாக கூறினார். இதில் இந்திய ஏற்றுமதியாளர்களின் 800 நிரந்தர காட்சிக்கூடங்களும், 14 பன்னோக்கு வளாகங்களும், 29 கூட்ட அரங்குகளும், 4 திறந்த வெளி பகுதிகளும், 4 சிறப்பு உணவகங்களும் உள்ளதாக தெரிவித்தார். விரைவில் மின்தடையில்லாத வகையில், 34 மெகாவாட் மின்சார வசதியுடன் 134 படுக்கைகளுடன் கூடிய ஹோட்டல் கட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862881

**************

IR-RS-SMB



(Release ID: 1863082) Visitor Counter : 107


Read this release in: Telugu , English , Urdu , Hindi