குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா இடங்களை காணவேண்டும் –இந்திய சுற்றுலா பயணிகளுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்

Posted On: 27 SEP 2022 6:35PM by PIB Chennai

சுற்றுலாவுக்கான சொர்க்கம் என்று இந்தியாவை வர்ணித்த குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர், சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா இடங்களை காணவேண்டும் என்று இந்திய சுற்றுலா பயணிகளை இன்று வலியுறுத்தினார்.

புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-19ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதை வழங்கி பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் சுற்றுலா முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியாவின் மகத்துவமான பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட அவர், நமது பழமையான முறைகளான ஆயுர்வேதம் மற்றும் யோகா, உலக அளவில் பிரபலமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய சுற்றுலா புள்ளியியல் 2022 என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத்தலைவர் வெளியிட்டார். அத்துடன் GoBeyond:75 Experiences of North India  என்ற மின் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862624

*************

IR-RS-SM


(Release ID: 1862654) Visitor Counter : 180


Read this release in: English , Urdu , Marathi , Hindi