பாதுகாப்பு அமைச்சகம்

‘புதிய இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, அதிநவீன செலவு குறைந்த பொருட்களைக் கண்டறிந்து தயாரிக்க இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் துறைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

Posted On: 27 SEP 2022 3:39PM by PIB Chennai

புது தில்லியில் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 5ம் ஆண்டு கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (செப்டம்பர் 27, 2022) உரையாற்றினார்.  புதிய இந்தியாஎன்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, அதிநவீன செலவு குறைந்த பொருட்களைக் கண்டறிந்து தயாரிக்க இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் துறைக்கு பாதுகாப்புத் துறை  அமைச்சர்  திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இது உள்நாட்டு தேவையை மட்டுமின்றி, சர்வதேச நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார்.

பாதுகாப்பான, வலிமையான நாடால் மட்டுமே, வெற்றியின் உயரத்தை அடையமுடியும் என்று அவர் கூறினார். உலகில் வலிமையான நாடுகளில் ஒன்றாக இந்தியாவை திகழ செய்யும் வகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உறுதி செய்ய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கான உகந்த சூழலை உருவாக்க தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம்  பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862541

************** 

IR-RS-SM

 



(Release ID: 1862647) Visitor Counter : 164