குடியரசுத் தலைவர் செயலகம்

கர்நாடகாவில் குடியரசுத் தலைவர்; மைசூரு தசரா பண்டிகையை தொடங்கிவைத்தார்

Posted On: 26 SEP 2022 6:20PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை  இன்று (செப்டம்பர் 26, 2022) தொடங்கிவைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் மைசூரு தசரா பண்டிகை வாழ்த்துக்களை கர்நாடகா மக்களுக்கு  தெரிவித்தார். அனைவருக்கும் சாமுண்டீஸ்வரி கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க தாம் பிரார்த்திப்பதாக கூறினார்.

நமது  நாட்டை முனிவர்கள் மற்றும் மக்கள் பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை  ஒருங்கிணைத்துள்ளதாக  தெரிவித்தார்.

நாடு முழுவதும் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து தெய்வீக மற்றும் மனித கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உள்ளது என்று அவர் கூறினார். மைசூரு தசரா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

கர்நாடகாவின் வளர்ச்சிப் பயணம் குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், 2021-22 நிதியாண்டில், ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் துறையில் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 53 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்தது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் கருதப்படுவதாக கூறினார். நிதிக் ஆயோக் நீடித்த வளர்ச்சி, இலக்குகள் - இந்தியா குறியீட்டு எண் -2020-21 இன் படி, புதுமை கண்டுபிடிப்பு குறியீட்டில் நாட்டிலேயே  கர்நாடாக முதலிடத்தில் உள்ளது. தொடக்கக் கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கை இலக்கை கர்நாடகா எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமரின் கிராமிய சதக் யோஜனா' திட்டத்தின் கீழ் 100 சதவீத இணைப்பு இலக்கை எட்டியுள்ளது என்று கூறிய அவர், இதுபோன்ற பல சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கர்நாடக அரசு மற்றும்  அம்மாநில மக்களை அவர் பாராட்டினார்.

 பின்னர், ஹூபாலியில் ஹூப்ளி-தர்வாட் நகராட்சி  ஏற்பாடு செய்த “பூர சன்மனாஎன்ற பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நகரவாசிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவரைப் பாராட்டியதன் மூலம், அவர்கள் இந்திய குடியரசுத் தலைவரை மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாராட்டியதாகக் கூறினார்.

 

ஹூப்ளி-தார்வாட் இரட்டை நகரங்கள் கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் புகழ்பெற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்றும், இந்தியாவின் கலாச்சார வரைபடத்தில் அவை இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். கர்நாடகாவின் வடக்கு பகுதியில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பல பிரபலமான கல்வி மையங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து தார்வாட்டில் உள்ள தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், தார்வாட் இந்திய தொழில்நுட்பக் கழகம் கல்வி வாயிலாக நமது நாட்டின் எதிர்காலத்தை தயார் செய்து நமக்கு பெருமை அளிப்பதாக குறிப்பிட்டார். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையம் என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகளுக்காக மத்திய அரசு, கர்நாடக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரை பாராட்டுவதாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862307

*************

IR-RS-SM



(Release ID: 1862339) Visitor Counter : 168