பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காபோன், ஜென்டில் துறைமுகத்தில் ஐஎன்எஸ் தர்காஷ்

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2022 4:57PM by PIB Chennai

கடற்கொள்ளை தடுப்பு ரோந்துக்கான பயிற்சியில் பங்கேற்க கினியா வளைகுடாவில்  உள்ள காபோன்  நாட்டு ஜென்டில் துறைமுகத்திற்கு ஐஎன்எஸ் தர்காஷ் கப்பல் சென்றடைந்தது.  காபோனுக்கு சென்ற முதலாவது இந்திய கடற்படை கப்பல் இதுவாகும்.

அந்த துறைமுகத்தில், கப்பல் ஊழியர்கள், அதிகாரப்பூர்வ மற்றும் தொழில்சார்ந்த உரையாடல்களிலும், விளையாட்டுகளிலும் பங்கேற்க உள்ளனர்.

தொழில்சார்ந்த உரையாடலின் போது, தீயணைப்பு தொடர்பான விவாதங்கள் மற்றும் பயிற்சிகள், சேதம் தவிர்த்தல், மருத்துவம் மற்றும் பாதி்க்கப்பட்டவர்கள் மீட்பு குறித்த விவகாரங்கள், நீர்மூழ்கி நடவடிக்கைகள் குறித்து இடம்பெறும்.  மேலும் யோகா பயிற்சி மற்றும் சமூக உரையாடலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கப்பலை பார்வையிட பொதுமக்களும்  அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862275

************** 

IR-RS-SM


(வெளியீட்டு அடையாள எண்: 1862301) வருகையாளர் எண்ணிக்கை : 264
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi