சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் 4 ஆண்டுகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் 1 ஆண்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு-நாள் ஆரோக்கிய மந்தன் 2022 திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 25 SEP 2022 4:39PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (2022, செப்டம்பர் 25) ஆயுஷ்மான் பாரத் திட்டம் 4 ஆண்டுகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் 1 ஆண்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு-நாள் ஆரோக்கிய மந்தன் 2022  திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

 

மத்திய அமைச்சர், இந்த திட்டத்தை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் பால், உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் தன் சிங் ராவத் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர் எஸ் சர்மா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

மிகப்பெரிய உலகளாவிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மிக முக்கியமான பங்குதாரர்களாக இந்த திட்டத்தின் பயனாளிகள் தான் இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாட்டில் 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 19 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் 24 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் கார்டு

எண்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த நடவடிக்கை நாட்டின் சுகாதார பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லை பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது நாளொன்றுக்கு 4.5 லட்சம் ஆயுஷ்மான்  கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தினமும் 10 லட்சம் கார்டுகள் தயாரிக்கப்படும் என்றார்.

 

அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று அவர் கூறினார்.

நாட்டில் சுகாதார சேவைகளை அணுகுவதில் பணக்காரர்களுக்கும்ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று மாண்டவியா கூறினார்.

 

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகியவை இணைத்து செயலாற்றும் போது, அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவை கிடைக்கும் என்ற மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் சாத்தியமாகி இருக்கின்றது என்றார்.

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் பேசும்போது, சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நாடு முன்னோடியாக இருப்பது மட்டுமல்லாமல், அனைத்து மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு முழுமையாய் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

டிஜிட்டல் ஹெல்த் எக்ஸ்போவை டாக்டர் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862097

*******



(Release ID: 1862122) Visitor Counter : 298