அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா, உலகின் முதலீட்டு இலக்காக வேகமாக மாறி வருவதால், நாட்டில் முதலீடு செய்ய இது "சிறந்த நேரம்" என்று நியூயார்க் வாழ் இந்தியர்களிடம் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்
Posted On:
25 SEP 2022 1:05PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை (தனிப் பொறுப்பு) இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (2022, செப்டம்பர் 25) நியூயார்க்கில் உள்ள இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களிடம், இந்தியா உலகின் முதலீட்டு இலக்காக வேகமாக மாறி வருவதால், நாட்டில் முதலீடு செய்ய இது "சிறந்த நேரம்" என்று கூறினார்.
நியூயார்க்கில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்தியர்கள் அளித்த சிறப்பான வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுடன் உரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட வணிகம் சார்ந்த நடவடிக்கைகளில் சீர்திருத்தங்கள், இணக்கத் தேவைகளைக் குறைத்தல், கடந்த கால சுயபரிசோதனை செய்யப்பட வேண்டிய வரி விதிப்பை நீக்குதல், கார்ப்பரேட் வரியை எளிமைப்படுத்துதல் போன்றவற்றைச் சுட்டிக்காட்டினார்.
உலக வங்கி அறிக்கையின்படி, திவால்நிலை மற்றும் திவால் குறியீடு (ஐபிசி) விகித அமைப்பில், இந்தியாவில் "வியாபாரம் எளிதாக செய்வதற்கான தரவரிசையில் 2014 ஆம் ஆண்டில்142-யில் இருந்து 2022-ஆம் ஆண்டில் 63 ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் 5ஜி, செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள், குறைக்கடத்திகள், பிளாக் செயின், பசுமை ஆற்றல் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்தியாவில் தற்போது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வளாகங்களை அமைக்கும் வாய்ப்பு உள்ளது, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
அமெரிக்காவில் பயிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில், இந்திய மாணவர்கள் தான் இரண்டாவது பெரிய குழுவாக இருப்பதாக கூறிய மத்திய அமைச்சர், இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் வளம் போன்றவற்றில் கருத்து பரிமாற்றம் நடைபெற்று, திறமைகளை மேம்படுத்தி டிஜிட்டல் யுகத்திற்கும், அறிவு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்பெறும். இந்திய-அமெரிக்க உறவுகள் 21 ஆம் நூற்றாண்டின் உறுதியான கூட்டாண்மையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் விநியோகச் செயல்முறை தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியாவை அதிகம் நம்புவதாக கூறிய மத்திய அமைச்சர், இந்த நிலைப்பாடு அவர்கள் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க உதவும் என்றார்.
இந்தியாவின் பன்முகத்தன்மை, கலை, புதுமை, விளையாட்டு சாதனைகள் மற்றும் பலவற்றைக் கொண்டாடுவதில் கைகோர்த்து,
ஒரு தேசமாக இந்தியா முன்னேறிச் செல்வதற்கு பங்களிக்குமாறு அமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனது 5 நாள் அரசுமுறை அமெரிக்கப் பயணத்தை நிறைவு செய்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862061
**********
(Release ID: 1862087)
Visitor Counter : 286