ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

லத்தின் அமெரிக்காவில் மேட் இன் இந்தியா- இந்திய கைவினைப் பொருட்களுக்கான வர்த்தகக் கண்காட்சி

Posted On: 24 SEP 2022 10:07AM by PIB Chennai

குவாத்தமாலாவில் (லத்தின் அமெரிக்கா) உள்ள இந்திய மிஷன் உடன் இணைந்து கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு, செப்டம்பர் 22 முதல் 24 வரை குவாத்தமாலாவில் இந்திய கைவினைப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் இதர தயாரிப்புகள் பற்றிய மேட் இன் இந்தியா-வர்த்தகக் கண்காட்சியை நடத்துகிறது. வீட்டு அலங்காரப் பொருட்கள், தரை விரிப்புகள், மர பொருட்கள், விளக்குகள், நவநாகரிக அணிகலன்கள், நறுமணம் மற்றும் ஆரோக்கிய பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள 10 தேசிய கைவினைக் கலைஞர்களும் ஏற்றுமதியாளர்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறார்கள்.

 

குவாத்தமாலாவின் துணை அதிபர் திரு குலெர்மோ காஸ்டில்லோ மற்றும் அந்நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் மனோஜ் குமார் மொஹாபாத்ரா இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் என்று கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் நிர்வாக இயக்குநர் திரு ராகேஷ் குமார் தெரிவித்தார். இந்தக் கண்காட்சியின் மூலம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொருட்களை வாங்குபவர்களுக்கு சிறந்த வர்த்தக வாய்ப்பு கிடைக்கும் என்றும், மக்களிடையேயான உறவு மேம்படும் என்றும் இந்தக் குழுவின் தலைவர் திரு ராஜ்குமார் மல்ஹோத்ரா கூறினார்.

 

உலகமே வியக்கும் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக டாக்டர் மனோஜ் குமார் மொஹாபாத்ரா கூறினார். இந்தியாவின் அபரிமிதமான திறன்கள், போட்டித் திறன் மற்றும் இதர நாடுகளுடன்  தரமான இணக்கத்தைக் கடைப்பிடிக்கும் தன்மையை உலகிற்கு எடுத்துரைக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமையும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861884

***************



(Release ID: 1861901) Visitor Counter : 157