சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் நாளை சைகை மொழி தினம் கொண்டாடப்பட உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2022 6:28PM by PIB Chennai

சைகை மொழி தினம் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 23 செப்டம்பர் 2022 அன்று (நாளை) புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் அமைந்துள்ள  சி டி தேஷ்முக் ஆடிடோரியத்தில்  கொண்டாடப்பட உள்ளது.

சர்வதேச சைகை மொழி தினமாக செப்டம்பர் 23 அன்று கொண்டாடப்படும் என்று ஐநா அறிவித்ததிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 23ம் தேதி அன்று சைகை மொழி தினத்தை இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் கொண்டாடுகிறது. விடுதலை பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு சைகை மொழி தினம் மத்திய சமூகநீதிமன்றம் அதிகாரமளித்தல்  அமைச்சகம் மூலம் கொண்டாடுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. காதுகேளாதோருக்கு தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைகை மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861555

**************

IR-RS-SM


(வெளியீட்டு அடையாள எண்: 1861584) வருகையாளர் எண்ணிக்கை : 262
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi