திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
நாட்டில் திறமை பற்றாக்குறை ஏதுமில்லை. ஆனால் உலகம்முழுவதும் திறமைவாய்ந்த மற்றும் திறன்மிக்க இந்தியர்களின் தேவை அதிகரித்துள்ளது:மத்திய இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்
Posted On:
22 SEP 2022 3:29PM by PIB Chennai
அரசின் திறன் இந்தியா முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்திய மின்னணு திறன் துறை குழுமம் சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. தொழில்நுட்பத்தில் தொழில் துறைக்கு தேவையான திறன்களுடன் இளைஞர்களுக்கு அதிகாரமளித்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாம்சங் புதுமை கண்டுபிடிப்புகள் திட்டத்தின் மூலம் 18-25 வயதுடையோர்களான 3000-க்கும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் திரு ராஜிவ் சந்திரசேகர், நாட்டில் திறமை பற்றாக்குறை ஏதுமில்லை. ஆனால் உலகம் முழுவதும் திறமைவாய்ந்த மற்றும் திறன்மிக்க இந்தியர்களின் தேவை அதிகரித்துள்ளது என்று கூறினார். தேசிய திறன் மேம்பாட்டு கழகமும், அமைச்சகமும் இணைந்து நீடித்த தீர்வுகளுக்காக தொழில் துறை மற்றும் திறன் சார்ந்த அமைப்புக்கிடையே நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861487
*****
IR-RS-SM
(Release ID: 1861537)
Visitor Counter : 191