இந்திய போட்டிகள் ஆணையம்
பிடிஎஸ் இன்வெஸ்ட்மென்ட் 1 பிரைவேட் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் திட்டங்கள் மற்றும் சொத்து மேலாண்மை சேவைகள் லிமிடெட் ஆகியவற்றின் முதலீடுகளை தொடர்ந்து, ஜியோ சினிமா ஓடிடி இயங்குதளத்தை வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட்டுடன் இணைக்க இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
22 SEP 2022 10:42AM by PIB Chennai
பிடிஎஸ் இன்வெஸ்ட்மென்ட் 1 பிரைவேட் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் திட்டங்கள் மற்றும் சொத்து மேலாண்மை சேவைகள் லிமிடெட் ஆகியவற்றின் முதலீடுகளை தொடர்ந்து, ஜியோ சினிமா ஓடிடி இயங்குதளத்தை வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட்டுடன் இணைக்க இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட வரைவானது, பிடிஎஸ் 1 மற்றும் ரிலையன்ஸ் திட்டங்கள் மற்றும் சொத்து மேலாண்மை சேவைகள் லிமிடெட் ஆகியவற்றின் முதலீடுகளை தொடர்ந்து, ஜியோ சினிமா ஓடிடி இயங்குதளத்தை வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட்டுடன் இணைப்பதை உள்ளடக்கியது.
பிடிஎஸ் 1 என்பது, சிங்கப்பூர் வணிக சட்டங்களின்கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம். இது தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேவ நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனத்தை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் திட்டங்கள் மற்றும் சொத்து மேலாண்மை சேவைகள் லிமிடெட் தகவல் தொழில்நுட்ப, வணிகம் மற்றும் உள்கட்டமைப்பு, மனிதவள மேலாண்மை, தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது தற்போது ஜியோ சினிமா ஓடிடி இயங்குதளத்தை சொந்தமாக இயக்கும் வணிகத்தையும் செய்து வருகிறது.
ஆர்எஸ்எல் தற்போது எந்த வணிகத்திலும் ஈடுபடவில்லை.
இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பின்வரும் சேவைகளில் வயாகாம் 18 லிமிடெட் ஈடுபட்டுள்ளது: (a)உலகம் முழுவதும் தொலைக்காட்சி ஒளிபரப்பு (b) Voot மற்றும் Voot Kids நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு (c) திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் (d) டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் உரிமம் (e) இது தொடர்பான பிற சேவைகள்.
**************
Release ID: 1861387
(रिलीज़ आईडी: 1861466)
आगंतुक पटल : 238