அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அமெரிக்காவில் 5 நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வாஷிங்டன் செல்லும் வழியில் இன்று மாலை நியூயார்க் சென்றார்

Posted On: 20 SEP 2022 6:09PM by PIB Chennai

அமெரிக்காவில் 5 நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர்  ஜிதேந்திர சிங் வாஷிங்டன் செல்லும் வழியில் இன்று மாலை நியூயார்க் சென்றார். பென்சில்வேனியாவின் பீட்டர்ஸ்பர்கில் செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறவுள்ள உலகளாவிய பசுமை எரிசக்தி செயல்பாட்டு அமைப்பின் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.

நியூயார்க் சென்றிருந்த டாக்டர் ஜிதேந்திர சிங்கை, ஜான் எஃப்  கென்னடி விமான நிலையத்தில் இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்  அமெரிக்க வர்த்தக சபையில் அமெரிக்கா – இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள விண்வெளி, அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட 35 நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த நிர்வாக அதிகாரிகளுடன்  வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் புறப்பட்டார்.

வாஷிங்டனில் இந்திய தூதர் ஏற்பாடு செய்துள்ள விருந்து நிகழ்ச்சியில், அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளுடன் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடுவார்.  இதைத் தொடர்ந்து, உலகளாவிய தூய்மை எரிசக்தி அமைப்பு நடத்த உள்ள மாநாட்டில் இந்திய தூதுக்குழுவிற்கு தலைமையேற்கும் அவர், செப்டம்பர் 21 அன்று பீட்டர்ஸ்பர்க் புறப்பட்டுச் செல்வார். 30 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், இளம் தொழில்முறையாளர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860910

------



(Release ID: 1860968) Visitor Counter : 125


Read this release in: English , Urdu , Hindi , Telugu