தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தோபா கல்லூரியின் 65-வது பட்டமளிப்பு விழா 2022 செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 19 SEP 2022 4:55PM by PIB Chennai

மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்துவார். தோபா கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் சந்தர மோகன் சிறப்புரை ஆற்றுவார். கல்லூரி முதல்வர் டாக்டர். பர்தீப் பண்டாரி ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

தோபா கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ஏ+ தர சுழற்சி-II அங்கீகாரம் பெற்றது. தோபா கல்லூரி தொடர்ந்து பல்வேறு முன்னேற்றங்களை செய்து வருகிறது. பல்கலைக் கழக மானியக் குழு இந்த கல்லூரிக்கு சிறந்த திறன் கொண்ட கல்லூரி என்ற தகுதியை வழங்கியுள்ளது.

2017-ஆம் ஆண்டில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தக் கல்லூரிக்கு நட்சத்திர கல்லூரி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. 81 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கல்லூரி தரமான கல்வியை பயிற்றுவித்து வருகிறது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ், கல்லூரி சமூக வானொலி ராப்தா 90.8-ஐ தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வரும் தோபா கல்லூரி ஒரு சிறந்த இடத்தை பெற்றுள்ளது.

**************

Release ID: 1860601


(रिलीज़ आईडी: 1860629) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi