தேசிய நிதி அறிவிக்கை ஆணையம்

பட்டய கணக்காளர் ராஜீவ் பெங்காலிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த தேசிய பொருளாதார கண்காணிப்பு ஆணையம் 5 ஆண்டுகளுக்கு பணியமர்த்தவும் தடைவிதித்துள்ளது

Posted On: 19 SEP 2022 3:43PM by PIB Chennai

திருவாளர் சுப்பிரமணியம் பெங்காலி & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பட்டய கணக்காளர் ராஜீவ் பெங்காலி தொழில் முறையில் தவறாக நடந்துகொண்டதால், அவரை 5 ஆண்டுகளுக்கு எந்த நிறுவனமும் அல்லது கார்ப்பரேட் அமைப்பும் சட்டப்பூர்வ தணிக்கையாளராகவும், உள் தணிக்கையாளராகவும் பணியமர்த்த தடை செய்து நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 132 (4)ன் படி தேசிய பொருளாதார கண்காணிப்பு ஆணையம் (என்எஃப்ஆர்ஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவருக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

பணிக்காலத்தில் தவறாக நடந்துகொண்டது பற்றி விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

  • கணக்கு தணிக்கையும் ஆறு தரங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய தணிக்கையாளர் தவறிவிட்டார்.
  • 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது, கட்டாயம் தேவை என குறிப்பிடப்பட்ட பரிவர்த்தனை விவரங்களை இவர் பணி செய்த டிடிஎம்எல் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதேபோல் சம்பந்தப்பட்ட நபர் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்களும் முழுமையாக வழங்கப்படவில்லை.
  • டிடிஎம்எல் நிறுவனம் வங்கி சாராத நிதிநிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என தவறான தகவலை தணிக்கையாளர் தந்துள்ளார்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை https://nfra.gov.in என்ற இணைய தளத்தில் என்எஃப்ஆர்ஏ வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860563

**************



(Release ID: 1860626) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Hindi , Telugu