பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளராக திரு. விஜோய் குமார் சிங் பொறுப்பேற்று கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2022 3:28PM by PIB Chennai

திரு.விஜோய் குமார் சிங், செப்டம்பர் 19 2022 அன்று, பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். திரு.சிங், பஞ்சாப் படை வீரர்கள் 1990-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் 32 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகத்தின் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

திரு.விஜோய் சிங் அண்மையில் ஜவுளித்துறை செயலாளராக பணியாற்றினார். அதற்கு முன் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார்.  இவர் பஞ்சாபில் பணியாற்றியபோது, பணியில் இருந்த மற்றும் ஓய்வு பெற்ற படை வீரர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார்.

                              **************

Release ID: 1860557


(வெளியீட்டு அடையாள எண்: 1860576) வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati