அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலகளாவிய தூய்மையான எரிசக்தி நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையிலான குழு அமெரிக்கா செல்கிறது
Posted On:
18 SEP 2022 5:10PM by PIB Chennai
மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையிலான குழு உலகளாவிய தூய்மையான எரிசக்தி நடவடிக்கை அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை அமெரிக்கா புறப்படுகிறது. இந்தக்குழுவில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை மாலை வாஷிங்டனுக்கு புறப்பட்டு அங்கிருந்து பிட்ஸ்பர்க்கும் பின்னர் நியூயார்க்கிற்கும் செல்கிறார்.
உலகளாவிய தூய்மையான எரிசக்தி நடவடிக்கை அமைப்பின் கூட்டம் செப்டம்பர் 21 முதல் 23 ஆம் தேதி வரை அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் நடைபெறும். தூய்மையான எரிசக்தி கண்டுபிடிப்பு மற்றும் வரிசைப்படுத்தலை விரைவுபடுத்த 30 நாடுகளைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள், கண்டுபிடிப்பாளர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் அமைச்சர்கள் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான தூய்மையான எரிசக்தி தலைவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் ஜிதேந்திர சிங், தமது புறப்பாட்டு அறிக்கையில், உலகளாவிய தூய்மையான எரிசக்தி நடவடிக்கை அமைப்பின் முழுமையான மற்றும் வட்டமேசை கூட்டங்களில் மிகவும் நெருக்கமான ஈடுபாடுகளை எதிர்நோக்குவதாகக் கூறியுள்ளார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தூய்மையான மின்சார தொழில்நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு இடையே, குறிப்பாக கோவிட் காலம் மற்றும் சமீபத்திய காலநிலை மாற்ற சவால்களில், பிரதமர் நரேந்திர மோடி மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான சுத்தமான எரிசக்தி தீர்வுகளில் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுவாக பரிந்துரைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை மேற்கோள் காட்டியுள்ள டாக்டர் ஜிதேந்திர சிங், “1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டிலிருந்து கடந்த 50 ஆண்டுகளில் நிறைய பேசப்பட்டாலும் மிகக் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 90 மில்லியன் குடும்பங்கள் சுத்தமான சமையல் எரிபொருளைப் பெறுவது மற்றும் விவசாயிகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பெறுவது போன்ற பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் நாங்கள் நடந்துகொண்டோம், பிரதமர்-KUSUM திட்டத்தின் கீழ் விவசாயிகள் சோலார் பேனல்களை அமைக்கவும், அதைப் பயன்படுத்தவும் மற்றும் விற்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மின்கட்டமைப்பிற்கான உபரி மின்சாரம் நிலைத்தன்மை மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும்"என்று தெரிவித்துள்ளார் .
செப்டம்பர் 20 ஆம் தேதி, டாக்டர் ஜிதேந்திர சிங் சுமார் 35 நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஜியோஸ்பேஷியல், ஸ்பேஸ், எர்த் & ஓஷன் சயின்ஸ், பார்மா மற்றும் பயோடெக் துறைகளுடன் தொடர்புடைய கூட்டாட்சி பிரதிநிதிகளுடன் ஒரு முக்கியமான வட்டமேஜை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்தியா ஹவுஸில் இந்திய தூதர் வழங்கும் இரவு விருந்தில் அமெரிக்க மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளுடன் அமைச்சர் உரையாடுவார்.
செப்டம்பர் 21 மற்றும் 22 தேதிகளில், டாக்டர் ஜிதேந்திர சிங் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860395
*******
(Release ID: 1860419)
Visitor Counter : 175