சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்களை மையப்படுத்திய 58 சேவைகள் முழுமையாக இணையம் மூலம் கிடைப்பதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவையைப் போக்கி, தாமாக முன்வந்து தெரிவிக்கும் அடிப்படையில் ஆதாரை உறுதி செய்தல் உதவியுடன் இந்த சேவைகளைப் பெறமுடியும்

Posted On: 17 SEP 2022 9:23AM by PIB Chennai

போக்குவரத்து தொடர்பான சேவைகள் கிடைப்பதில் மிகப்பெரும் வசதியை வழங்க  குடிமக்களை மையப்படுத்திய பல சீர்திருத்தங்களை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம்,  வாகனப்பதிவு, பெர்மிட், உரிமையாளர் மாற்றம் போன்ற  மக்களை மையப்படுத்திய மொத்தம் 58 சேவைகள் முழுவதையும் இணையம் வழியாக கிடைக்கச் செய்யும் வகையில்,  சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2022 செப்டம்பர் 16 அன்று சட்டபூர்வ ஆணை - எஸ்.ஓ. 4353 (இ)  வெளியிட்டுள்ளது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.  தன்னார்வமாக ஆதாரை உறுதி  செய்யும் உதவியுடன் இந்த சேவைகள் கிடைக்கும். 

இத்தகைய  சேவைகளால் குடிமக்களின் முக்கியமான நேரம் மிச்சப்படுவதோடு விதிமுறைகளின்  சுமையையும் குறைக்கும்.  மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறையக்கூடும். இது அவர்களின் செயல்பாட்டில்  கூடுதல் திறனுக்கு வழிவகுக்கும்.

Click here to see Gazette Notification

*******


(Release ID: 1860062) Visitor Counter : 224