ஜல்சக்தி அமைச்சகம்
‘தூய்மையே சேவை’ இருவார இயக்கம் தொடங்கியது
Posted On:
16 SEP 2022 4:07PM by PIB Chennai
ஊரக இந்தியாவில் முழுமையான துப்புரவை நோக்கிய முயற்சிகளை விரைவுப்படுத்துவதற்காக தூய்மையே சேவை என்ற இருவார இயக்கத்தை ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை தொடங்கியுள்ளது. குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது, திடக்கழிவு மேலாண்மைக்கான செயல்பாடு ஆகியவற்றுக்கு இது மாபெரும் சமூக திரட்சியான இயக்கமாகும். இதன் ஒரு பகுதியாக (i) கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்காத மக்கள் இயக்கத்தில் சமூக திரட்சியையும் பங்கேற்பையும் உறுதி செய்தல், (ii) கிராமங்களில் முழுமையான துப்புரவுக்கு முக்கியத்துவம் அளித்தல், (iii) அனைவரின் பணியாக துப்புரவு என்ற கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்துதல், (iv) தூய்மை இந்தியா தினத்தை (அக்டோபர் 2) கிராம அளவில் கொண்டாடுதல் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பர் 15, அன்று தொடங்கிய இந்த இயக்கம், அக்டோபர் 2, அன்று நிறைவடையும்.
இந்த இயக்கத்தின் கீழ் கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய செயல்கள்:
- கழிவுப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் பிரித்தலுக்கான கூடங்கள் / மையங்கள் கட்டுதல்
- நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் தூய்மையாக பராமரித்தல், அவற்றைச் சுற்றி மரக்கன்றுகள் நடுதல்
- குப்பைகளை சேகரிப்பதற்கு அரசு இ-சந்தை மூலம் மின்கலத்தால் இயக்கப்படுகின்ற மூன்று சக்கர வாகனங்கள் / மின்சார வாகனங்கள் வாங்குதல்
- பிளாஸ்டிக் போன்ற மட்காத குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்தல்.
- ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்துதல்
- குப்பைகள் போடாமைக்கான முழக்கம் எழுதுதல் / உறுதிமொழி எடுத்தல்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859823
**************
(Release ID: 1859905)