அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், 60 புதிய தொழில் முனைவோருக்கு 'இன்ஸ்பைர்' விருதுகளையும், 53,021 மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்
Posted On:
16 SEP 2022 3:47PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று 60 புதிய தொழில்முனைவோருக்கு 'இன்ஸ்பைர்' விருதுகளையும், 53,021 மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார். இந்த விருது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்படத்துறையால் நிறுவப்பட்டுள்ளது. இது புதிய கண்டுபிடிப்பாளர்ளுக்கு, அவர்களின் புதிய தொழில் முனைவு பயணத்துக்கு உதவியாக வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், 2020-21-ஆம் ஆண்டில் உலகின் பிற நாடுகள் கொவிட் பெருந்தொற்றுடன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், வருடாந்தர இன்ஸ்பைர் விருதுகள், ‘மானக்’ போட்டிகள் மூலம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 6.53 லட்சம் யோசனைகள் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் முன்னேப்போதும் இல்லாத வகையில் கவனத்தை ஈர்த்தது என்று தெரிவித்தார். புதிய யோசனைகளுக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், இந்தத் திட்டம் 702 மாவட்டங்களின் கண்டுபிடிப்புகள் (96%) உட்பட 124 மாவட்டங்களில் 123, மகளிருக்கான முக்கியத்துவம் 51%, கிராமப்புற பள்ளிகளில் இருந்து 84% பேர் பங்கேற்பு மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களால் நடத்தப்படும் 71% பள்ளிகள் பங்கேற்பின் மூலம், இணையற்ற அளவிலான உச்சத்தை எட்டியது. 6.53 லட்சம் பேரில், 53,021 மாணவர்கள் தலா ரூ.1,000 நிதியுதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக டாக்டர். ஜிநே்திர சிங் கூறினார்.
அடுத்தக்கட்டமாக அவர்கள், மாவட்ட அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டிகள், மாநில அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டிகள் ஆகியவற்றில் போட்டியிட்டனர் என்றும், தற்போது மொத்தம் 556 மாணவர்கள் கண்காட்சி மற்றும் திட்டப் போட்டிகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859810
**************
(Release ID: 1859897)
Visitor Counter : 194