திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பயிற்சி நிறுவனங்களின் மறுவடிவம்' குறித்த கருத்து பரிமாற்ற அமர்வில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் பங்கேற்பு
Posted On:
13 SEP 2022 8:58AM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற ‘பயிற்சி நிறுவனங்களின் மறுவடிவம்' குறித்த கருத்து பரிமாற்ற அமர்வில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று கலந்து கொண்டார். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் திரு பிரதான், தொழில்நுட்பம், உலகை வேகமாக மாற்றியமைத்து வருவதாகக் கூறினார். கல்வி முதல் சுகாதாரம் வரை, வேளாண்மை முதல் நிதி வரை, ஒவ்வொரு துறையும் தொழில்நுட்பத்தால் முன்எப்போதும் இல்லாத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் புதிய வாய்ப்புகளும், புதிய திறன் சூழல்களுக்கான தேவையும் உருவாவதாக அவர் குறிப்பிட்டார்.
21-ஆம் நூற்றாண்டில் துடிப்பான பணியாளர்களை உருவாக்குவதற்கு பயிற்சியாளர்களின் திறன்களை கட்டமைப்பதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். பயிற்சி நிறுவனங்கள், திறன் சூழலியலை வலுப்படுத்த ஒரு விரிவான மற்றும் எதிர்கால உத்தியுடன் தங்களை மறுவடிவமைத்து, மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பயிற்சியாளர்களைத் தயார் செய்ய வேண்டும் என்று அமைச்சர் திரு பிரதான் மேலும் தெரிவித்தார். அடுத்த தலைமுறை பணியாளர்களை உருவாக்குவதில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் அவர். இந்தியாவைத் திறன் மையமாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858841
*******
(Release ID: 1858902)
Visitor Counter : 182