திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக முன்மாதிரி திறன் போட்டியில் திரு லிகித் ஒய்பி வெண்கலப் பதக்கம் வென்றார்

प्रविष्टि तिथि: 12 SEP 2022 12:20PM by PIB Chennai

உலக முன்மாதிரி திறன் போட்டி 2022-ல் திரு லிகித் ஒய்பி வெண்கலப் பதக்கம் வென்றார். டொயோட்டா தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் இயந்திரவியலில் லிக்கித் பட்டயம் பெற்றுள்ளார். இப்போட்டிக்காக ஜனவரி 2022-லிருந்து அவர் பயிற்சி பெற்றார். இந்தியாவின் தேசிய திறன் போட்டியான “இந்தியா திறன் 2021”-ல் முன்மாதிரி திறன் பிரிவில் வெற்றி பெற்றார். டொயோட்டா இந்தியா நிபுணரும், சர்வதேச உலகத்திறன் போட்டியில் முன்மாதிரி திறன் பிரிவின் முதன்மை நிபுணருமான திரு பாஸ்கர் சிங் மூலம் அவர் பயிற்சி பெற்றுள்ளார்.

சர்வதேச உலகத்திறன் உறுப்பு நாடுகளின் திறன் மிக்க இளைஞர்களுக்கு இடையே இப்போட்டி நடத்தப்படுகிறது. உலகத்திறன் போட்டி 2022-ன் முதல் கட்டப் போட்டி சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் செப்டம்பர் 7 முதல் 10ம் தேதி வரை நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858657

------


(रिलीज़ आईडी: 1858672) आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu