மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மத்சய சம்படா யோஜனாவின் (பிஎம்எம்எஸ்ஒய் ) 2வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
Posted On:
10 SEP 2022 3:26PM by PIB Chennai
பிரதமரின் மத்சய சம்படா யோஜனா (பிஎம்எம்எஸ்ஒய்) அதன் வெற்றிகரமான இரண்டாம் ஆண்டினை இன்று நிறைவு செய்தது. இந்த முக்கியமான நாளினை நினைவுகூரும் வகையில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஆகியவை புதுதில்லியில் இன்று ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. பிஎம்எம்எஸ்ஒய் திட்டத்தின் சாதனைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்களை வெளிப்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டார். தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் திரு தருண் ஸ்ரீதர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் தலைமை இயக்குநர் டாக்டர் எஸ். அய்யப்பன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைனும் கலந்து கொண்டார்.
சுமார் 300 மீனவர்கள், மீன் வளர்ப்போர் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்து மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களையும் வெற்றிக் கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பிஎம்எம்எஸ்ஒய் மற்றும் அதன் சாதனைகள் பற்றிய சிறு புத்தகம் வெளியிடப்பட்டது, மத்சய சம்படா: மீன்வளத்துறை செய்தி மடலின் 3ஆவது பதிப்பு, ஏற்றுமதியை பல்வகைப்படுத்துதலின் ஒரு பகுதியாக திலாப்பியா செயல் திட்டம், ஸ்காம்பி செயல் திட்டம், தேசிய விதை திட்டம்: 2022-2025 போன்றவையும் நிகழ்வின் பகுதியாக இருந்தன.
இந்த நிகழ்வை கருத்திற்கொண்டு, சிறு புத்தகங்களை வெளியிட்டு, சாதனைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்களின் சாராம்சம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியதற்காக மீன்வளத் துறை மற்றும் திட்ட நிர்வாகக் குழுவை மத்திய அமைச்சர் திரு ரூபாலா பாராட்டினார்.
டாக்டர் எல் முருகன், இந்தியாவில் அதன் சுதந்திர காலத்திலிருந்து இன்று வரையிலான துறைசார் மாற்றத்திற்காக மீன்வளத் துறை எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதையும் இந்தியாவின் முக்கியமான துறை என்ற முறையில் மீன்பிடித் துறையின் பண்டைய வரலாற்றையும் பகிர்ந்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858281
*****
(Release ID: 1858315)