கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

எல் சால்வடார் நாட்டின் புகழ்பெற்ற கலைஞரான திரு ரோடோல்ஃபோ வேகா ஓவியடோவின் ஓவியக் கண்காட்சியை புதுதில்லியில் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி

Posted On: 10 SEP 2022 9:06AM by PIB Chennai

இந்திரா காந்தி தேசிய கலை மையத்துடன் இணைந்து கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலும், எல் சால்வடார் குடியரசு தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்நாட்டின் புகழ்பெற்ற கலைஞரான திரு ரோடோல்ஃபோ வேகா ஓவியடோவின் ஓவியக் கண்காட்சியை மத்திய வெளியுறவு விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், கலை மற்றும் கைவினை மூலம் ஒருவருக்கு ஒருவர் இடையேயான கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் பாராட்டுதல்கள் முதலியவை வாழ்க்கைமுறையை நன்கு அறிந்து கொள்ள உதவுவதோடு நாடுகள் இடையேயான நல்லுறவையும் மேம்படுத்துகின்றன என்று கூறினார்விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் முக்கியமான தருணத்தில் திரு ரோடோல்ஃபோ வேகா ஓவியடோ இங்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

புகழ்பெற்ற கலைஞரான திரு ரோடோல்ஃபோ வேகா ஓவியடோ, ஓர் ஓவியர், உட்புற கட்டிட அமைப்பாளர் மற்றும் கலாச்சார நிர்வாகி ஆவார். தமது கலாச்சார பணிகளுக்காகவும், ஃபிரான்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு இடையே தொடர்பை ஒருங்கிணைத்ததற்காகவும் ஃபிரான்ஸ் அரசாங்கத்தின் விருதை அவர் பெற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://www.pib.gov.in/pressreleasepage.aspx?prid=1858200

•••••••••••••

 



(Release ID: 1858257) Visitor Counter : 107